ஜோமொன் டி ஜான்
மலையாளத்தில் சார்லீ, என்னு நிண்டே மொய்தீன், உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜோமொன் டி ஜான். தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா, இனி வெளிவர இருக்கும் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் உள்ளிட்டப் படங்களில் ஒளிப்பதிவாளராக பனியாற்றி இருக்கிறார். அனுஷ்கா நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் இவர் பணியாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக அறியப்படுபவர் ஜோமொன் டி ஜான்.
பிரிவில் முடிந்த முதல் திருமணம்
ஜோமொன் டி ஜான் மற்றும் பிரபல மலையாள நடிகையான ஆன் அகஸ்டீன் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். ஆன் அகஸ்டீன்எலசம்மா என்ன ஆங்க்ட்டி மற்றும் நீ-நா மற்றும் சோலோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆன் அகஸ்டினை பார்த்த மூன்றாவது நாளில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தான் கேட்டதாக ஜோமொன் டி ஜான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆன் அகஸ்டீனின் அம்மாவிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்த காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த தம்பதிகளின் விவாகரத்து திரையுலகினரை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மீண்டு திருமண வாழ்க்கையில் அடிவைத்தார்
தற்போது ஜோமொன் டி ஜான் அனு எல்ஸா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் ’மை ஹோப் & மை ஹோம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை க்ரித்தி ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil: ”பிக்பாஸ் வீட்டில் சிக்கிய 6 பேர்” - இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இவர்கள் தான்..!
Ajithkumar: “லேட்டா வந்ததுக்கு சாரி” - அஜர்பைஜானில் பிரபல ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!