பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 9.30 முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சில் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளங்களிலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலமாக 5 பேரும் என மொத்தம் 23 போட்டியாளகள் பங்கேற்றனர். கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று ஒளிபரப்பான வார இறுதி எபிசோடில் இருந்து சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு விஜய், விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா, விஜய் வர்மா உள்ளிட்டோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 


இப்படியான நிலையில் இன்றைய (டிசம்பர் 25) நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியானது. அதில், “இந்த வார எவிக்‌ஷனுக்கு இரண்டு பேரை நாமினேட் செய்ய சொல்கிறார்கள். அதில் நிக்ஸன், மாயா உள்ளிட்டோர் பெயர்கள் சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிக்ஸன், ‘ஓபன் நாமினேஷன் அப்ப ஒரு சீனு, மறைமுக நாமினேஷன் அப்ப ஒரு சீனும் நடக்குது’ என கூறினார். தொடர்ந்து பேசும் மாயா, ‘ரொம்ப கேவலமா இருக்குது. நாமினேஷன் காரணம் சொல்றது” என தெரிவிக்கிறது. 






இதற்கு பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஜய், ‘நீங்க வெக்கமே இல்லாம சொல்லலையா?’ என கூற, ‘நான் உன்ன பத்தி பேசவே இல்லையே’ என மாயா பதிலளிக்கிறார். ‘நீங்கள் நக்கலா பேசுனீங்க’ என விஷ்ணு குற்றம் சாட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனைப் பார்க்கும்போது இந்த வாரம் நிச்சயம் மிகப்பெரிய பஞ்சாயத்து இருக்கு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியானது. அதில், ‘மாயா, நிக்ஸன், மணி, ரவீனா, தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது” என தெரிவிக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.