‘தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க’ - பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்!


அபூர்வ சகோதரர்கள், கார்கி  உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. 80களின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். மேலும் படிக்க


தலைவா...! தளபதியையே தியேட்டரில் ஃபேனாக மாற்றிய மிரட்டல் ஹீரோ... - அமெரிக்காவில் நடந்தது என்ன தெரியுமா?


கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஃபேன் பாய் மொமண்டுகளை வாரி வழங்கும் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்யின் ஃபேன் பாய் தருணத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 90களில் அறிமுகமாகி, தத்தி தத்தி அடியெடுத்து வைத்து, தொடர்ந்து குடும்ப ஆடியன்ஸ்களை தன்வசப்படுத்தி, பின் ஆக்‌ஷன் ரூட் பிடித்து மாஸ் ஹீரோவாக உயர்ந்து இன்று கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மேலும் படிக்க


ஓவரா கலெக்‌ஷன் அள்ளிட்டாங்க போல.. ஒரு மாதத்துலையே ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்: தேதி அறிவிப்பு


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம், முதல் வாரத்திலேயே சுமார் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் படிக்க


கேங்கஸ்டர் சாம்ராஜ்யத்தில் புதுவரவு... தனுஷ் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தேவா?


தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், சென்னையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க


திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் - காரணம் என்ன?


நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசியுள்ளார். இருவரும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. மேலும் படிக்க


லோகேஷ் கனகராஜின் கதையில் ராகவா லாரன்ஸ்.. நயன்தாரா நாயகி.. செம்ம அப்டேட்!


சந்திரமுகி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் லோகேஷ் கனகராஜின் கதையில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து முடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள திரைப்படம் சந்திரமுகி 2. கங்கனா ரனாவத்  இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க, வடிவேலு மற்றும் பலர்  நடித்துள்ளார்கள். மேலும் படிக்க


விறுவிறு ஆக்‌ஷன்.. மீண்டும் ஓர் சிலை கடத்தல் கதை.. மாஸ் காட்டினாரா சரத்குமார்... 'பரம்பொருள்' விமர்சனம்!


அரவிந்த ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத் குமார், காஷ்மீரா பர்தேசி நடிப்பில் மீண்டும் ஓர் சிலை கடத்தல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பரம்பொருள்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரைக் காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுகிறது. மேலும் படிக்க