• ஹீரோயினாக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமி..!


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான பாடகி ராஜலட்சுமி செந்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். இதுதொடர்பாக பேசியுள்ள ராஜலட்சுமி, “32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்” என கூறியுள்ளார். மேலும் படிக்க



  • இட ஒதுக்கீட்டை இழுத்துப்பிடித்த நர்மதா: முதலமைச்சரிடம் முத்தான வாழ்த்தை பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!


'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் 'இடஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் பேசிய பெண்மணியை சோசியல் மீடியா பக்கம் மூலம் வாழ்த்தியுள்ளார் முதக்அலமைச்சர் மு.க. ஸ்டாலின். விஜய் டிவியில் பேச்சு திறமை கொண்டவர்களுக்காக 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. டந்த சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த நிகழ்ச்சி புது பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  நர்மதா என்ற பெண்மணி "இட ஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைத்து பாராட்டுகளை குவித்தது. மேலும் படிக்க



  • ரிலீஸுக்கு முன்பே 170 கோடிக்கு வியாபாரமான ஆதிபுருஷ்?


பிரபாஸ் நடிப்பில் மாபெரும் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். வாரத்திற்கு ஒருமுறை இந்தப் படம் குறித்தான ஏதாவது ஒரு அப்டேட் வந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படம் சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.ஓம் ராவத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  5 மொழிகளில் வெளியாகிறது. மேலும் படிக்க



  • சிவகார்த்திகேயனின் மாவீரன் பட அட்டேட்டை விட்ட படக்குழு - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 


மாவீரன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுப்பட்டுள்ள வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் ‘மாவீரன்’ திரைப்பட ரிலீஸிற்காக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினரின் இந்த அப்டேட் அவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி சங்கர்  ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில்  உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஜூலை 14 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.