செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா மற்றும் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர்கள் பலர். உமா பத்மநாபன், வரதராஜன், பாத்திமா பாபு, ரேவதி, ஸ்ரீவித்யா ஷங்கர், சரண்யா, பிரியா பவானி ஷங்கர் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர் தான் அனிதா சம்பத். 


 



பிக் பாஸ் அனுபவம் :


சன் டியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மிகவும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். சர்க்கார், தர்பார், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் தலைகாட்டிய அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். தொட்டது எடுத்ததற்கு எல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சக போட்டியாளர்களை கடுப்பேத்தினார். கணவர் பற்றி  கதைகதையாக பேசியிருந்தார். பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றால் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்குமென எதிர்பார்த்த அனிதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி பின்னர் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அந்த எலிமினேஷனை கூட புலம்பலோடு தான் ஏற்றுக் கொண்டார். அதற்கு பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அங்கும் தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துக் கொண்டார். 


சோசியல் மீடியா பயனாளர்:


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் விளம்பரம், வீடியோ, ரீல்ஸ் மூலம் பிஸியாக இருந்து வந்தார். அதை தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான தெய்வ மச்சான் படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 


 



அதிரடியான பதிலடி :


அந்த வகையில் அனிதா சம்பத் சோசியல் மீடியாவில் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்றுக்கு இணையதள வாசி ஒருவர் மிகவும் பங்கமாக ' பக்கா பொறுக்கி மாதிரி இருக்க' என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் அனிதா சம்பத். "உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல. அத நீ இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்குற. உனக்கு லைக் போட்ட அந்த நாலு பேரும் கூட எங்கேயோ செம்மையா அடி வாங்கி  இருப்பானுங்க போல " என ரிப்ளை செய்து சிரிக்கும் ஈமோஜியை போட்டுள்ளார். அனிதாவின் இந்த அதிரடியான பதில் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தரம் தாழ்ந்த கமெண்ட்களுக்கு பதிலளித்து உங்களின் தரத்தை குறைத்து கொள்ளாமல் கடந்து போகலாமே என அனிதாவிற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி தற்போது இணையத்தில் ஒரு பேசுபொருளாக உள்ளது.