Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
- Thalapathy 68 Update: போடு வெடிய..! தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..- வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி
விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி-68(Thalapathy 68) படத்தை வெங்கட் பிரபு(Venkat Prabhu) இயக்க உள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா(Yuvan Shankar Raja) இசையமைக்க உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
- Yaadhum Oore Yaavarum Kelir: கதை திருட்டு புகாரில் சிக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ .. விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
- HipHop Adhi: '2 வருஷமா படமே வரல.. நான் இப்ப முன்ன மாதிரி இல்ல’ - வீரன் பட நிகழ்ச்சியில் ஆதி உருக்கமான பேச்சு
‘சிவகுமாரின் சபதம்’ ‘அன்பறிவு’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் 3வது முறையாக இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்துள்ள படம் “வீரன்”. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். மேலும் படிக்க
- Vijay Yuvan Combo: 'சம்பவம் இருக்கு.. முடிவுக்கு வந்த ஏக்கம்..' 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் - யுவன்..! எகிறிய எதிர்பார்ப்பு..!
தளபதி 68 படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து உருவாகும் தளபதி -68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் படிக்க
- Urfi Javed: உண்மையான ஃபேஷன் ஐகான் இவர் தான்... வண்ணத்துப்பூச்சி கோட்சூட் கலக்கிய உர்ஃபி ஜாவேத்: புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடங்கி கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் ஆடையாக மாற்றி தன் ஃபேஷன் சென்ஸால் இந்தி ரசிகர்கள் தாண்டி ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத். தற்போது பாலிவுட் உலகின் ஃபேஷன் சென்சேஷனாக வலம் வரும் உர்ஃபி ஜாவேத் தன் இன்ஸ்டா பக்கத்தால் இந்தியாவின் ஹாட் செலிப்ரேட்டிக்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் படிக்க