ஹாலிவுட் வட்டாரத்தில் புராஜெக்ட்-கே டீசரை வெளியிடும் கமல்
பான் இந்தியா படமாக உருவாகும் ‘புராஜெக்ட் கே’-வின் டீசரை சான் டியாகோ காமிக்-கான் விழாவில் தீபிகா படுகோன், பிரபாஸூடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
AK-க்கு எதிராக கருத்துக்கணிப்பு நடத்திய புளூசட்டை மாறன் - அப்செட்டில் அஜித் ரசிகர்கள்
விளம்பரமே பிடிக்காது என்று கூறும் அஜித் வேண்டுமென திட்டமிட்டு விளம்பரத்துக்காக தந்து புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறாரா என புளூ சட்டை மாறன் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சியில் நடித்து வரும் அஜித் குமார், அடிக்கடி காஷ்மீர், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைக் ரேஸ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அண்மையில் நேபாளத்திற்கு பைக்கில் அஜித் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மேலும் படிக்க
ஊரே ரீல்ஸ் செய்யும் ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடிய ஒரிஜினல் நாயகி... தமன்னாவின் கலக்கல் நடனம்!
தமன்னா நடனத்துடன் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா பாடலின் ப்ரொமோ வீடியோ கடந்த ஜூன் 03ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
அப்படி.. இப்படி.. என அளந்துவிட்ட படக்குழு; வசூலில் மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரலபலமடைந்த நடிகர்கள் வரிசையில் பிரபாஸும் ஒருவர். இவரது நடிப்பில் 2டி மற்றும் 3டி வடிவிலும் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தை மைய்யமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ப்ரோமோஷன்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு கொடுக்கப்பட்டது. மேலும் படிக்க
பணத்தால் சோதனை செய்யப்படும் மனிதர்களின் அறம்.. பாராட்டைப் பெற்ற பம்பர் திரைப்படம்.. முழு விமர்சனம்..!
அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கியிருக்கும் படம் பம்பர். வேதா பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜீவி படத்தில் நடித்த வெற்றி, ஷிவானி, கவிதா பாரதி, ஹரிஷ் பேரடி, ஜி. பி. முத்து, தங்கதுரை ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க
அதிரடி காட்டப்போகும் அருண் விஜய்.. கம்பேக் கொடுக்கும் எமி ஜாக்சன்.. ஏ.எல் விஜய் இயக்கும் மிஷன் விரைவில்!
ஏ. எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் மிஷன். எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் , ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம். மேலும் படிக்க