ஏ. எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் மிஷன். எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் , ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம்.


மிஷன்  பாகம் – 1


மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகியப் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் தற்போது இயக்கி வரும் படம் மிஷன். முதலில் அச்சம் என்பது இல்லையே என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது. தனது மகளது சிகிச்சைக்காக லண்டன் சென்ற ஒரு தந்தை அங்கு சிறையில் மாட்டிக்கொள்வதும்  ஒரு பெரிய கலவரத்தின்போது அதில் இருந்த தப்பி வருவதும் படத்தின் மையக் கதை. அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் எமி ஜாக்ஸன். மேலும் மலையாள நடிகரான  நிமிஷா சஜயன் இந்தப் படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார்.






எதிர்கொண்ட சவால்கள்


மிக உற்சாகமாக தொடங்கிய படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயத்தினால் தடைபட்டது. பின் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லண்டன் மற்றும் சென்னை ஆகிய இரு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது மிஷன் திரைப்படம்.


கம்பேக் கொடுக்கும் எமி ஜாக்சன்


 நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில்  நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஷங்கர் இயக்கிய 2.0.


லைகா பகிர்ந்த படப்பிடிப்பு வீடியோ


மிகப்பெரிய செலவில் இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  படத்தை தயாரித்திருக்கும்  லைகா நிறுவனம் தற்போது இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.