பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரலபலமடைந்த நடிகர்கள் வரிசையில் பிரபாஸும் ஒருவர். இவரது நடிப்பில் 2டி மற்றும்  3டி வடிவிலும் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தை மைய்யமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ப்ரோமோஷன்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு கொடுக்கப்பட்டது. 


படம் ரிலீசாகும் தினத்தில் இருந்து அதாவது ஜூன் 16-ஆம் தேதியில் இருந்து தியேட்டரில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை அனுமனுக்கு ஒதுக்கப்படும் என கூறியது மட்டும் இல்லாமல் ஒரு இருக்கையும் ஒதுக்கப்பட்டது. அதேபோல், இப்படத்திற்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த படக்குழுவிற்கு தலையில் கல் விழுந்ததுபோல் ஏமாற்றம்தான் மிஞ்சியது. 


அதாவது படம் ரீலீஸான நாள் முதலே இப்படம் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவது போன்ற திரைக்கதை இருப்பதாகவும், படத்திற்கும் ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனாலே பெரும்பாலான காட்சிகள் தியேட்டரில் இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. இப்படத்திற்கு தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் , தெலுங்கில் மட்டும் தான் அதிகப்படியாக வசூல் ஆனது. அதுவும் பிரபாஸின் ரசிகர்களால் தான் அந்த வசூல். படம் பார்த்துவிட்டு வந்து ஊடகங்களிடம் படம் ’நன்றாக இல்லை’ எனக் கூறிய திரைப்பட விமர்சகர் ஒருவரை பட்ம பார்க்காத பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டர் வாசலிலேயே ரவுண்டு கட்டினர். ஆனால் அதன் பின்னர் படத்தை பார்த்த ரசிகர்கள் மனம் நொந்து வெளியே வந்தது தான் மிச்சம். 


தமிழிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தமிழில் நல்ல கலெக்‌ஷன் வரும் என எதிர்பார்த்த படக்குழுவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. வார இறுதி நாட்களில் குழந்தைகளுக்கு கார்டூன் படங்களை காட்டுவது போல திரையரங்கிற்கு வந்து சென்ற குடும்பத்தினர் தான் அதிகம். 


இந்நிலையில் படம் ரிலீசான மூன்றாவது நாள் முதல் படக்குழு தரபபில் இருந்து இவ்வளவு கோடி வசூல் அவ்வளவு கோடி வசூல் எனக் கூறிவந்தனர். ஆனால் இப்போது தான் பேசிவருகிறார்கள் இதுவும் படத்தின் ப்ரோமஷனுக்காக செய்யப்பட்டதாம், இப்படி இருக்கையில் தற்போது ஆதிபுருஷ் படம் முற்றிலுமாக தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்டது. அப்படி இருக்கும் போது படத்தின் மொத்த கலெக்‌ஷன் 300 கோடியைக் கூட நெருங்கவில்லையாம். இது இல்லாமல், படத்தின் ஓடிடி விற்பனை மற்றும் சேட்டிலைட் விற்பனை ஆகியவையும் சேர்த்து 500 கோடியை நெருங்கிறதாம். 


கலெக்‌ஷன் நிலவரம் இப்படி இருக்க, படத்தின் மொத்த செலவு மட்டும் 600 கோடி ரூபாயாம். இப்படி இருக்கும் போது 500 கோடியைக் கூட நெருங்காத கலெக்‌ஷனால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ராமனாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன எனக் கூறிய பிரபாஸ் இந்த படத்திற்கு வந்த நெகடிவ் ரெஸ்பான்ஸை பார்த்ததுமே, படக்குழுவினருடனான தொடர்பை அப்படியே கட் செய்துவிட்டு சலார் படத்தில் கவனம் செலுத்துகிறாராம்.