ரத்தமும் சதையுமாக இருக்கும் விக்ரம் நடிக்கும் தங்கலான்: படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?


இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி சியான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் உலக தரத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் சினிமா ஆர்வலரான தனஞ்சயன். தமிழ் சினிமாவில் இதுவரை பின்பற்றப் பட்டுவந்த பல கட்டமைப்புகளை உடைத்தவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அவர்களது வாழ்க்கையை தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக  கோடிக்கணக்கான மக்களுக்கு காட்டியவர். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல்வேறு முன்மாதிரியான செயல்களை செய்து வருகிறார். மேலும் படிக்க


கதையில இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா? அப்போ இன்னொரு சூர்யா லுக் எப்படி இருக்கும்?


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா திரைப்படம், முழுக்க முழுக்க சரித்திர கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் இருப்பது தெரியவந்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவரது 42-வது படமான கங்குவா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க


ஊர்வசியின் 700-வது படமாக உருவான ‘அப்பத்தா’ .. நேரடி ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா?


தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையாக கொண்டாடப்படும் ஊர்வசியின் 700வது படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  1983ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஊர்வசி. அந்த ஒரு படமே ஊர்வசி யார் என்பதை ரசிகர்களுக்கு சொல்லியது. தொடர்ந்து கமல் தொடங்கி பல  முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயினாக கலக்கியவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.  மேலும் படிக்க


'தமிழ் சினிமாவுல தமிழர்கள் மட்டும்தான் வேலை பார்க்கணுமா?’ : கொந்தளித்த பவன் கல்யாண்..


ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் திரையுலகிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் “விநோதய சித்தம்”. சமுத்திரகனி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றது. இந்த படம் தற்போது தெலுங்கில் ’ப்ரோ’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க


அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்.. யாரை மீட் பண்ணிட்டு வந்திருக்கார் தெரியுமா? வாவ்..


அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும் படிக்க


'மொத்தமே ஒன்றரை மணி நேரம் படம் தான்' - திகில் கிளப்பியதா “சிங்க்” படம்?.. விமர்சனம் இதோ..!


அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில்  கிஷன் தாஸ்,  மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சிங்க்” (sync). சிவராம் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாம் காணலாம். மேலும் படிக்க