இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி சியான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் உலக தரத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் சினிமா ஆர்வலரான தனஞ்சயன்.
பா.ரஞ்சித்
தமிழ் சினிமாவில் இதுவரை பின்பற்றப் பட்டுவந்த பல கட்டமைப்புகளை உடைத்தவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அவர்களது வாழ்க்கையை தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களுக்கு காட்டியவர். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல்வேறு முன்மாதிரியான செயல்களை செய்து வருகிறார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா, நட்சத்திரம் நகர்கிறது என தனது ஒவ்வொரு படத்திலும் புதிய கதைக்களத்தை தேர்வு செய்து கலை நேர்த்தியுடன் படங்களை உருவாக்கிவதில் கவணம் செலுத்தி வருகிறார். தற்போது இதுவரை தான் இயக்கியப் படங்களைவிட் மிகப்பெரிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ரஞ்சித்.
தங்கலான்
உண்மை சம்பவங்களை மையப்படுத்து பா. ரஞ்சித் இயக்கி வரும் சரித்திரக் கதை தங்கலான். சியான் விகரம். மாலவிகா மோகனன், பார்வதி திருவோது முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் . ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. சியான் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக தங்கலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
பொங்கல் ரிலீஸ்
நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த தங்கலான் அண்மையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன . படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் சில காலம் படப்பிடிப்பு தாமதாகியதும் ஒரு காரணம். இந்நிலையில் தங்கலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
100 கோடியத் தாண்டிய பட்ஜட்
தங்கலான் திரைப்படத்தின் பட்ஜட் திட்டமிடப் பட்டதை விட பலமடங்கு அதிகரித்து தற்போது படத்தின் பட்ஜெட் 100 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும் உலக அள்வில் இந்தப் படத்தை எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாள மற்றும் சினிமா ஆர்வலர் தனஞ்சயன்.