நாங்க அரசியல் படத்துல நடிப்போம்.. அரசியலில் நடிக்க மாட்டோம்.... மீண்டும் ஷங்கர் விஜய் கூட்டணி..


 இளைய தளபதி விஜயின் 70-வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஷங்கர் விஜய் கூட்டணி இணையுமா? என்று எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் நடிகர் விஜய். அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.இது அவருக்கு 68-வது படம். மேலும் படிக்க


தங்கத்தட்டில் தரமான ஆக்‌ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!


மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் ஏழாவது பாகம் மிஷன் இம்பாசிபள் – டெட் ரெக்கனிங் (பாகம் ஒன்று) (Mission Impossible Dead Reckoning - Part 1) . டாம் க்ரூஸ், ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோஃபர் மெக்கரீ, எரிக் ஜெண்டர்சன் திரைக்கதை எழுதி கிறிஸ்டோஃபெர் மெக்கரி இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க


'முடிவுக்கு வந்த மொய்தீன் பாய் ஆட்டம்’ .. லால் சலாம் படத்தின் ரஜினி காட்சிகள் ஓவர்..!


லால் சலாம் படத்தின் ரஜினி தொடர்பான காட்சிகள் முடிவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும்  படத்தில்  ரஜினி நடிக்க உள்ளார். மேலும் படிக்க


இது ஒரு அழகிய கனா காலம் - மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்!


தனது மகன் குகன் தாஸின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  சின்னத்திரையில் தனது மிமிக்ரி, டைமிங் டயலாக் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் படிக்க


‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ - பாடல் வரிகளின் வற்றாத ஜீவநதி நா.முத்துக்குமாருக்கு பிறந்த நாள்


”ஆரிரோ ஆராரிரோ, ஆனந்த யாழை மீட்டியவன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், கனா காணும் காலங்கள், காதல் வைத்து, மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகே” போன்ற பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள்.  1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் என்னமோ, வருங்காலத்தில் அவரையே ஒரு புத்தகமாக அனைவரையும் படிக்க வைத்து விட்டார். மேலும் படிக்க


2வது முறையாக அபராதம் கட்டிய நடிகர் விஜய்; சிக்னலை மதிக்காமல் சென்ற கார் - நடந்தது என்ன..?


நடிகர் விஜய் நீலாங்கரையில் சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், நேற்று  மாவட்ட பொறுப்பாளர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பனையூரில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிறகு அனைவருடனும் அவர் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார். மேலும் படிக்க