• Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..!




தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார்.  தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில் பேசுபொருளானது.. இதனால் உற்சாகமான அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் படிக்க..




  • Mansoor Ali Khan: அயோத்தி ராமர் கோயில்.. அல்லா சொத்தை ஆட்டையை போட்டால் நல்லா இருக்க முடியுமா? - மன்சூர் அலிகான் காட்டம்!




ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரமாண்டமான கட்டப்பட்டுள்ள அயோத்தி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பாஜக பற்றி நடிகர் மன்சூர் அலிகான் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க




  • Pongal 2024 Wishes: குலவையிட்ட கீர்த்தி.. சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல்.. பிரபலங்களின் பொங்கல் ஆல்பம்!




தைத்திருநாளான இன்று சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து புத்தரிசியுடன் பொங்கல் வைத்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதல் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தும், தாங்கள் பொங்கல் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். மேலும் படிக்க..




  • Captain Miller Box Office Collections: தொடரும் வசூல் வேட்டை.. 3வது நாளில் கோடிகளை அள்ளிய கேப்டன் மில்லர்.. முழு விபரம் உள்ளே..!




ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குநராக உயர்ந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் கேப்டன் மில்லரை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க..




  • Vetrimaaran: “வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும்” - விருப்பம் தெரிவித்த பாலிவுட் ஜாம்பவான் நடிகர்!




கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், சத்யா, ஃபேமிலி மேன் ஆகிய படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். தமிழில் சமர், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸில் அவர் நடித்துள்ள கில்லர் சூப் வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனம் பெற்று வருகிறது. இதில் நாசர், இயக்குநர் கொங்கனா சென் ஷர்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாய் தனது புதிய வெப் சீரிஸ் குறித்தும் தமிழில் நடிப்பது குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க..