Udhayanidhi Stalin: ‘இதுவே திருப்தி; இனி வாய்ப்பில்லை ராஜா...’ - செய்தியாளர் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கறார்....!

இன்று மாமன்னன் படம் வெளியானதையொட்டி அப்படக்குழு, செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்றது. உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள்.  முழு வெற்றியும் மாரி செல்வராஜ் சார், அவருடைய எழுத்துக்கும், கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார், ரஹ்மான் சார், தேனி ஈஸ்வர் சார், மற்ற நடிகர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு சமர்ப்பணம். ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை ஷூட் பண்ணோம். 6 மாச 7 மாச உழைப்பு. அந்த உழைப்பை மக்கள் வரவேற்கும் போது கொண்டாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய வரவேற்புக்கு நன்றி.” என்றார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/udhayanidhi-stalin-says-that-he-will-not-act-hereafter-in-maamannan-release-special-press-meet-125926/amp

Mari Selvaraj: “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயந்தேன்; உதய் சாருக்கு நன்றி” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!

மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பின்னர் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “படம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும். படத்தில் என்ன இருக்கு, யார் இருக்கா..? என்ன கதை இருக்கு, படம் எதை உணர்த்துகிறது, என்னவா அது உள்வாங்கப்படுது, இதையெல்லாம் மக்கள்தான் சொல்ல வேண்டும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/maamannan-movie-director-of-mari-selvaraj-met-the-reporters-after-watching-maamannan-125925/amp

Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் கடைசிப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க https://tamil.abplive.com/movie-review/entertainment/movie-review-maamannan-review-tamil-mari-selvaraj-udhayanidhi-stalin-vadivelu-keerthy-suresh-maamannan-abp-nadu-critics-review-rating-125829/amp

Udhayanidhi Stalin: முதல் நீ.. முடிவும் நீ.. உதயநிதியின் முதல் மற்றும் கடைசி படத்தில் நடிகர் வடிவேலு..!

நடிகராக தனது திரை வாழ்க்கையை ஆதவன் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் தொடங்கி மாமன்னன் படத்தில் முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பேச்சாக இருப்பது மாமன்னன் திரைப்படம் தான். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராக உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளிவருகிறது என்பது தான். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/udhayanidhi-stalin-cinema-journey-debut-movie-aadhavan-to-maamannan-125887/amp

Watch Video: 'கூந்தல் அழகி.. இப்போ குயிலழகி..' சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை பார்வதி.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகை பார்வதி நாயர் சரா கபி மெரி நாசர் என்ற இந்தி பாடலை தனது சொந்த குரலில் பாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ”எப்படி இவ்வளவு அழகான பாடலை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த பாடலை நான் நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கின்றேன். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/hindi-song-sung-by-actress-parvathy-fans-are-praising-on-instagram-125895/amp