Actor Parthiban: 'என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால்..' மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்!


மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று (06.12.2023) தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க


Actor Mansoor Ali Khan: ’எல்லாத்துக்கும் அரசை குறை சொல்ல முடியாது’ - கார் மீது ஏறி உதவி கேட்ட மன்சூர் அலிகான்!


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழையால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள அரும்பாக்கம் பகுதியிலிருந்து பிரபல நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ வெளியிட்டுள்ளார். 


கடந்த 4-ம் தேதி வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் சென்னை வழியாக ஆந்திராவை அடைந்து கரையை கடந்தது. பெரு மழையில் வெள்ளக்காடானது சென்னை. பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, வட சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் வடியாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் படிக்க


Actor Vijay:  ‘அரசோடு கைகோர்த்து உதவுங்க’ - மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு


மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படிக்க


Vanitha Vijaykumar: "பிக்பாஸை பாக்க வெறுப்பா இருக்கு.. நாடகம் நடக்குது" - கோபத்தில் கொந்தளித்த வனிதா விஜயகுமார்! 


பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.  அதன்படி, ”பிக்பாஸ் குறித்த எனது ட்வீட்களை நீக்கி விட்டேன். ட்விட்டரில் எமோஷ்னல் ஆகக் கூடாது. குறிப்பாக ரியாலிட்டி ஷோ குறித்து பதிவிடுவதற்கு ட்விட்டரை பயன்படுத்த வேண்டியது அல்ல. எனவே, நான் ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து பதிவிடுவதை நிறுத்துகிறேன்.  பிக்பாஸ் லைவ்வை பார்ப்பதற்கு வெறுப்பாகவும், தொந்தரவாகவும் இருக்கிறது. பிக்பாஸ் லைவ்வை பார்க்காமல் இருப்பது நல்லது. பிக்பாஸ் ஒரு ஃபேக் டிராமா. இதுகுறித்து  ரிவ்யூ கொடுக்கவும் மாட்டேன். ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க


Cyclone Michaung: வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகள்! மக்களைத் தேடிச்சென்று உதவிய பிரபலங்கள் இவர்கள்தான்!


மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. 4 மற்றும் 5ம் தேதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வடசென்னையில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்புகள், சாலைகள் மற்ரும் அலுவலகங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை விட்டு 3 நாட்களை கடந்த போதிலும் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது.  மேலும் படிக்க