குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்தன. புகழ் வலிமை உள்ளிட்ட படங்களிலும், சிவாங்கி டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.
அதேபோல், இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர்.
விளம்பர படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்துள்ள இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இப்படமானது பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் கதாநாயகன் அஸ்வின், தேஜு அஸ்வினி, இயக்குநர் ஹரிஹரன் ஆகிய மூவரும் சேர்ந்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்தனர்.
அந்தப் பேட்டியில் பேசிய அஷ்வின், “நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். என்னைப் போல் லட்சக்கணக்கான பேர் வெளியில் வாய்ப்புக்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். நான் கோவையிலிருந்து சென்னை வந்தபோது என்னைப்போல் 100 பேர் இருப்பார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் மணி சார் அலுவலகம் சென்றபோது அங்கு மட்டுமே என்னைப் போல் 100 பேரை பார்த்தேன். என்னைவிட குறைவாக கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அதிகம் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். தற்போது வாய்ப்பு கேட்பது எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. எனக்கு தெரிந்து நிறைய பேர் வருவார்கள். அவர்கள் தங்களது மிகச்சிறந்தவைகளை கொடுப்பார்கள்.
குக் வித் கோமாளி எனது திரை வாழ்க்கைக்கு பெரிய பங்கு இருக்கிறது. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் எனது அப்பா, அம்மாவுக்கு. அவர்கள் சொன்னது அப்போ புரியவில்லை இப்போதுதான் புரிகிறது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Siddharth Apology | "நான் ஒரு பெண்ணியவாதி" - சாய்னா நேவாலிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சித்தார்த்!
‛அவனை ஒரு முட்டாப்பயனுதான் நெனச்சேன்...’ சீனுராமசாமி குறித்து இயக்குனர் பாலா ஓப்பன் டாக்!