Vasanthabalan: பா.ரஞ்சித்தை பத்திரமா பாத்துக்கோங்க.. மேடையிலே வசந்த பாலன் சொன்னது என்ன?
Director Vasanthabalan: முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிரபல இயக்குனர் வசந்தபாலன் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். ஆல்பம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
பகிரங்க மன்னிப்பு:
Just In




இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது, தமிழ் சினிமாவில் ரஞ்சித் வருவதற்கு முன்பாக தலித் பற்றிய பார்வை, ஜாதி பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் இன்று வேறு ஒன்றாக இருந்தது.
நிஜமாகவே நாகராஜ் மஞ்சுளே வந்த பிறகு, ரஞ்சித் தமிழில் வந்த பிறகு, மாரி செல்வராஜ் உள்ளே வந்த பிறகு அந்த மொத்த பார்வையும் மாறியது. வெயில் படத்தில் நான் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.
ரஞ்சித் ஏற்றி வைத்த விளக்கு:
நாம் சித்தரிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சிறுபான்மையினராக, தலித்தாக இருந்துவிடக்கூடாது என்ற கூடுதல் கவனம், மூன்றாம் பாலினத்தவரை எப்படி நடத்த வேண்டும் என்ற கவனத்தை ரஞ்சித் தன்னுடைய வணிக படங்கள் வாயிலாக எடுத்து வந்தது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும்.
அந்த மாற்றம் மிக முக்கியமான மாற்றம். மொத்த தமிழ் சினிமாவிலும் அது மாறியுள்ளது. பெரிய படத்தில் சின்னதாக ஒரு சாலையில் வேலை செய்பவரை குறை சொன்னால் கூட ஃபேஸ்புக்கில் 10 பேர் எழுதும் அளவிற்கு அரசியல்படுத்தப்பட்டுள்ளது. கலையின் முக்கியமான வேலை அரசியல். அந்த வேலையை ரஞ்சித் மிக சிறப்பாக ஆற்றல் விளக்கை ஏற்றி வைத்தது அழகாக எரிகிறது.
ரஞ்சித்தை பத்திரமா பாத்துக்கோங்க:
இயக்குனர் பெரிய படம் கிடைத்த பிறகு, ரஜினி படம் கிடைத்த பிறகு கல்யாண மண்டபம் கட்டலாம், கொடைக்கானல்ல இடம் வாங்கலாம். ஆனால், ஒரு நூலகம் தொடங்கனும், கூகை எவ்வளவு பெரிய விஷயம். நான் உதவி இயக்குனரா இருந்தபோது, 1200 சம்பளம் இருந்தபோது 1200க்கும் புத்தகம் வாங்கி படிப்பேன். 92, 93ல் ஒவ்வொரு புத்தக கண்காட்சிக்கும் சென்று இந்த புத்தகத்தை வாங்க முடியாதா? என்று ஏங்கிக்கொண்டிருப்பேன்.
உதவி இயக்குனரா இருப்பவருக்கு எந்த புத்தகத்தை படிக்கனும், எந்த புத்தகத்தை படிக்கக்கூடாது என்ன செய்யக்கூடாது என்ற காலகட்டம். கூகை ஒரு இயக்கமாக மாறியுள்ளது. இது ரொம்ப பெரிய விஷயம். இசைக்கு ஒரு விழா நடத்துகிறார். திரைப்படத்திற்கு ஒரு விழா நடத்துகிறார். ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஞ்சித்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக அரசியல்ல சொல்லனும்ங்குற கட்டாயம் இருக்கிறது.
நெஞ்சு வலிக்க கதை சொல்லிருக்கேன்
எதிரான குரலை மிக கவனமாக பதிவு செய்ய வேண்டும். தமிழ் சினிமா மிக மோசமான காலகட்டத்தில் உள்ளது. நான் நெஞ்சு வலிக்க கதை சொல்லிருக்கேன். 2.30 மணிக்கு கதை சொல்ல சொல்லுவாங்க. நல்லா பிரியாணி சாப்பிட்டு கதை சொல்ல சொல்லுவாங்க. கதை சொல்ல போயிட்டு சாப்பிடாம இருந்து டீ சாப்பிட்டு, நின்னு கதை சொல்லிட்டு வெளிய வந்தா வாந்தி, வாந்தியா வரும். டீ சாப்பிட முடியாது. நெஞ்சு வலிக்க கதை சொல்லும் இயக்குனராகத்தான் மேடையில் இருக்கிறேன்.
இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மத்தியில் சண்டை, பெப்சி ஒத்துழைக்க மாட்டேங்குது, ஓடிடி வாங்க மாட்டேங்குது நம்ம படத்தை, தியேட்டர்ல ஷோ கொடுக்க மாட்டேங்குறாங்க, ஷோ கொடுத்தா கேன்சல் ஆகுது இப்படினு இங்க இருக்குற பிரச்சினை படம் எடுக்கவே விடாத பிரச்சினையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வசந்தபாலனின் ஆல்பம் படம் தோல்வியைத் தழுவிய பிறகு அவர் வெயில் படத்தை இயக்கினார். 2006ம் ஆண்டு வெளியான இந்த படம் அந்தாண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார். பரத் கதாநாயகனாகவும், பசுபதி, பாவனா, பிரியங்கா, ஸ்ரியா ரெட்டி, ரவிமரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் பரத் - ரவிமரியா இடையே விளம்பர பதாகை தொழிலில் மோதல் ஏற்படும். அதில் ரவிமரியாவின் வில்லன் கதாபாத்திரத்தில் பன்றி மேய்ப்பவராக அவரை வசந்தபாலன் காட்டியிருப்பார். அது குறிப்பிட்ட சாதியினரை குறிப்பிடுவதாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு தற்போது வசந்தபாலன் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சி மேடையில் மன்னிப்பு கோரியுள்ளார்.