சல்மான் கானின் புதிய கார்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். சமீபத்தில் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய புல்லட் ப்ரூஃப் Mercedes Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் சல்மான் கான். இந்த காரின் மொத்த மதிப்பு ரூ 3 கோடி 40 லட்சமாகும். ஏற்கனவே ஒரு புல்லட் ப்ரூஃப் கார் வைத்திருந்த நிலையில் தற்போது புதிய காரை வாங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்ததைத் தொடர்ந்து நிசான் பாட்ரோல் எஸ்யூவி காரை இறக்குமதி செய்தார் சல்மான் கான் . ஏற்கனவே, கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடி கொண்ட கஸ்டமைஸ்ட் டொயோட்டா லேண்ட் குரூஸர் அவரிடம் இருந்து வருகிறது.
சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னாய்
1998 ஆம் ஆண்டு மான் வேட்டையில் ஈடுபட்ட சர்ச்சையில் நடிகர் சல்மான் கான் சிக்கினார். பிளாக்பக் எனப்படும் இந்த மான் இனத்தை வழிபடும் சமூகத்தைச் சேர்ந்தவர் பிரபல கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னாய். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னாய் தரப்பில் இருந்து சல்மான் கானுக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அந்த வகையில் சல்மான் கானிற்கு நெருக்கமானவராக இருந்த பாபா சித்திக் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்குப் பின் லாரன்ஸ் பிஷ்னாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சம்லான் கான் வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் லாரன்ஸ் பிஷ்னாய் சம்பந்தபட்டிருப்பதாக கூறப்பட்டது.
Car loan Information:
Calculate Car Loan EMI