சனம் ஷெட்டி சகோதரர் மரணம்

நடிகை சனம் ஷெட்டியில் இளையர சகோதரர் ராகுல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரர் இறந்த தகவலை நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார். " என இளைய சகோதரர் ராகுல் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இந்த கொடூரமான நிகழ்வால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறோம். இந்த இழப்பில் இருந்து நானும் என்னுடைய குடும்பமும் எப்போதும் மீளப் போவதில்லை. வாழ்க்கையில் இத்தனை கொடிய நிகழ்வுகளை எதனாலும் நியாயப்படுத்த முடியாது. என் அன்பு தம்பி ராகுல் எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் உன்னை மறக்கமாட்டோம் . நீ எங்கு இருந்தாலும் மன நிம்மதியோடும் மகிழ்ச்சியாகவும் இரு. உனக்கு குட்பை சொல்ல முடியாது. இன்னொரு பக்கத்தில் உன்னை நாங்கள் சந்திப்போம்.  இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி " என சனம் ஷெட்டி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படத்தின்  மூலம் சினிமாவில் அறிமுகமானார் சனம் ஷெட்டி. அதே ஆண்டில் 'சினிமா கம்பெனி' படத்தின்  மூலம் மலையாளத்திலும்  அறிமுகமானார். இதன்பின்னர் மாயை, தொட்டால் விடாது, மாயை, கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, டிக்கெட், வால்டர், ஊமை செந்நாய், மஹா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷனம் ஷெட்டி 63வது நாளில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.