சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கியிருக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினி தங்கையாக கீர்த்தி சுரேஷும், ஜோடியாக நயன்தாராவும்  நடித்துள்ளனர். குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கு அண்ணாத்த படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.


தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் மிகக் கடுமையான விமர்சனத்தை அண்ணாத்த சந்தித்தது. குறிப்பாக இயக்குநர் சிவா கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அண்ணாத்த ரிசல்ட்டை பார்த்து ரஜினி தரப்பு அப்செட் என்ற தகவலும் கோலிவுட்டில் பரவியது.


இந்நிலையில் அண்ணாத்த இயக்குநர் சிவா சன் நியூஸ் தொலைக்காட்சிக்குகு அளித்த பேட்டியில், “அண்ணாத்த படம் பெரும் வெற்றி என்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதைய தலைமுறைக்கு அண்ணன் - தங்கை பாசத்தை சொன்ன படம் அண்ணாத்த. குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்வதற்காக எடுக்கப்பட்ட படம்.




100 பேர் இருந்தார்கள் என்றால் 80 பேருக்கு படம் பிடிக்கும் 20 பேருக்கு பிடிக்காது. 20 பேருக்கு பிடிக்காததால் அந்தப் படம் தவறான படம் என்று அர்த்தம் இல்லை. திரைப்படத்தை ரசிக்கும் 80 பேரை நாம் மதிக்க வேண்டும், அவர்களது ரசனையை மதிக்க வேண்டும்.


ஒரு இயக்குநரின் படைப்பில் அவரது முந்தைய படங்களின் சாயல் இருப்பதை தவிர்க்கை இயலாது. படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்ய வேண்டும்.  


ரஜினி அடிக்கடி தொலைபேசியில் அழைக்கிறார். நாம ஜெயிச்சிட்டோம் சிவா என்று சொன்னார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பாச பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது அம்மாவிற்கு படம் ரொம்ப பிடித்துவிட்டது. படத்தை பார்த்துவிட்டு சிறுவன் ஒருவன் தனது தங்கையிடம் பாசத்தை வெளிக்காட்டியபடி வந்தான். அதுதான் ஒரு இயக்குநராக எனக்கு நிறைவு” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது


அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது தீவிரவாத தாக்குதல்: 7 பேர் வீரமரணம்... பிரதமர் மோடி கடும் கண்டனம்!


கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிப்பு... விருது பெற்றவர்கள் முழுவிபரம் இதோ!