மணிப்பூரில் அண்மைக்காலமாக ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சீனா, மியான்மர், வங்கதேசம் மற்றும் பூட்டான் ஆகிய எல்லைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள்.


இந்த நிலையில் அஸ்ஸாம் ரைபிள்ஸின் கமாண்டிங் அதிகாரி கலோனல் விப்லாப் திரிபாதி தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் வெளியே சென்றுவிட்டு ராணுவ வாகனத்தில் முகாமுக்கு திரும்பிகொண்டிருந்தார்.


அப்போது அந்த வாகனத்தில் இவர்களுடன் இந்திய வீரர்களும் இருந்தனர். வாகனம் மணிப்பூர்- மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டம் அருகே வந்தபோது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  இதன் காரணமாக அந்த வாகனத்தில் இருந்த விப்லாப் திரிபாதி, அவரது மனைவி, மகன், மேலும் 4 வீரர்கள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.  மேலும் 4 வீரர்கள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இத்தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.


 






பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ’குழந்தைகளுக்குக் கொரோனா ஊசி..? பொறுமையா போட்டுக்கலாம்!’ - மத்திய சுகாதார அமைச்சர் சொன்னது என்ன?