சமீபத்தில் புல்லட் பாடலால் டிரெண்டிங் ஆகி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படம் “தி வாரியர்”. தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி கதாநாயகனாகவும், ஷியாம் சீங்கா ராய் படம் மூலம் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.


ஜூலை 14-ம் தேதி படம் ரிலீஸாகவுள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 6) படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.


Also Read | உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்..? ஓபிஎஸ் தரப்பு மனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!


இந்நிகழ்ச்சியில், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், எந்திரன், நண்பன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரும் லிங்குசாமியின் நண்பருமான ஷங்கர் கலந்துக்கொண்டார். படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வந்ததாக கூறி மன்னிப்பு கேட்டு படத்தை மிகவும் பாராட்டினார்.


அவர் கூறுகையில்… "வாரியர் ஒரு நல்ல டைடில், ஏன்னென்றால் எல்லோரும் எந்நேரமும் எதுக்காவது போராடி கொண்டேதான் இருக்கிறோம். அப்படி பார்த்த அனைவரும் வாரியர்கள் தான். மிகவும் பொருத்தமான டைட்டில். இப்படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் நன்றாக செய்துள்ளார் டி. எஸ். பி. ஒரு பாட்டு ஹிட் ஆகிவுள்ளதா இல்லையா என்று வீட்டில் உள்ள பிள்ளைகளின் ப்ளே லிஸ்டை கேட்டால் தெரிந்துவிடும். எது டிரெண்டிகான பாடல் என்று. என் வீட்டில் உள்ள மூன்று பேரின் போனிலும் புல்லட் பாடல் தான் ரிப்பீட்டில் இருக்கும்.


டி. எஸ். பி படத்துக்கு படம் வித்தியாசமாக பண்ணுகிறார். புஷ்பா படத்திலும் நன்றாக இருந்தது. அது என் போனில் ரிப்பீட் மோடில் இருக்கும். உப்பென்னா படத்திலும் அதேபோல் நன்றாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.


ராமை நான் டிரெய்லரில் பார்த்தேன். மிகவும் அருமையாக நடிகர் விக்ரம் போல் இருந்தது. அவர் படங்களை பார்ததில்லை. இந்த படத்தை கண்டிப்பாகப் பார்ப்பேன். ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருக்கு பெரிய வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.


கீர்த்தி ஷெட்டி, அப்கம்மிங் ஆர்டிஸ்ட். உப்பென்னாவில் நன்றாக நடித்திருந்தார். இன்னும் நிறைய படங்கள் செய்து கீர்த்தி சுரேஷைப்போல் தேசிய விருது வாங்க என்னுடைய வாழ்த்துக்கள்.




இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள். பாரதிராஜா மிகப்பெரிய இயக்குநர். அவர் என் மகளைப்பற்றி இங்கு பெருமையாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அவளைப்பற்றி பேசியது அவளின் பிறந்த நாளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். 





லிங்குசாமி ஒரு நல்ல ரசிகன், எல்லாத்தையும் நன்கு ரசித்து பாப்பார். அவருடைய ரசனை கண்டிப்பாக இந்த படத்திலும் இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் நல்ல நண்பர். கொரோனா காலத்தில் எனக்கு நிறைய பிரச்சினைகள் வந்தது. அதை நான் அவருடன் தான் பகிர்ந்து கொள்வேன். அப்போது அவர் சொல்லுவார். நீங்க கவலை படாதீங்க சார். உங்களுடன் நான் இருக்கேன். முதலில் என் தலை தான் போகும், கவலை படாதீங்க என்று. அது தான் நட்பு. நன்றி லிங்கு, என்னுடைய வாழ்த்துகள்.”


முடிவில் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறி தன் உரையை முடித்தார்.


Also Read | Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி.. காவேரி மருத்துவமனையில் அனுமதி!