Actor Vikram Health LIVE: அப்பாவுக்கு நெஞ்சுவலி இல்லை...வதந்தியை நம்பாதீங்க... இன்ஸ்டாவில் உருகிய துருவ் விக்ரம்..

Actor Vikram Health Condition LIVE Updates: நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

LIVE

Background

Actor Vikram Health Condition Live Updates:

நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் விக்ரமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

1966 -ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய சேது திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. 

தொடர்ந்து கமர்ஷியல் பக்கம்  திரும்பிவிக்ரம், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தினாலும், விமர்சன ரீதியான காசி, சாமுராய், பிதாமகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் பிதாமகன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 

Continues below advertisement
17:58 PM (IST)  •  08 Jul 2022

Vikram Health : அப்பாவுக்கு நெஞ்சுவலி இல்லை...வதந்தியை நம்பாதீங்க... இன்ஸ்டாவில் உருகிய துருவ் விக்ரம்..

Vikram Health : அப்பாவுக்கு நெஞ்சுவலி இல்லை...வதந்தியை நம்பாதீங்க... இன்ஸ்டாவில் உருகிய துருவ் விக்ரம்..

16:48 PM (IST)  •  08 Jul 2022

நமது விக்ரம் நலமுடன் இருக்கிறார்... வதந்தி வேண்டாமே.. விக்ரம் மேலாளர் கொடுத்த விளக்கம்!

சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சீயான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி இருந்தது, அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகள் தவறாகக் கூறுவதுபோல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.

இந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான தனிமையை தாருங்கள். நமது அன்பான சீயான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும், பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும்  நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 

15:07 PM (IST)  •  08 Jul 2022

இன்று மாலை வீடு திரும்புகிறார் நடிகர் விக்ரம்..?

நடிகர் விக்ரம் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

14:57 PM (IST)  •  08 Jul 2022

நடிகர் விக்ரமுக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவர்கள் முடிவு என தகவல் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது

நடிகர் விக்ரமுக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவர்கள் முடிவு என தகவல் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது

14:54 PM (IST)  •  08 Jul 2022

Actor Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்போவதாக தகவல்..!

நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

14:55 PM (IST)  •  08 Jul 2022

Actor Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சு வலி..!

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

14:44 PM (IST)  •  08 Jul 2022

விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக தயார்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் மகான் திரைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் பாகம் - 1 மற்றும் கோப்ரா திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றனர்.