இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவை பிரம்மாண்டமாக அடையாளப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். சாதாரண உதவி இயக்குநராக இருந்து, தனக்கென தனிபணியை உருவாக்கி, பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்த சங்கர், முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்தவர்.


25 ஆண்டுகளை கடந்து இன்றும் வெற்றி இயக்குனராக பயணிக்கும் சங்கரின் பயணம் குறித்தும், அவரது உதவியாளர்கள் குறித்தும், அவரது தயாரிப்பாளர்கள் குறித்தும், அவரது பேவரிட் டயலாக் குறித்தும், இணையதளம் ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார் சங்கர். இதோ அந்த பேட்டியின் முக்கிய சாரம்சங்கள் சில...




‛‛என் படத்தில் எனக்கு பிடித்த டயலாக் நிறைய இருக்கு. அதில், ‛என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே...’ ‛எல்லா நாட்லயும் கடமையை மீற தான் லஞ்சம் வாங்குவாங்க... இங்கே கடமையை செய்யுறதுக்கே லஞ்சம் வாங்குறாங்க...’ ‛இன்பர்மேஷன் இஸ் வெல்த்...’ இன்னும் நிறைய இருக்கு. அந்நியன் படத்தில் எல்லா டயலாக்கும் பிடிக்கும். குறிப்பா, ‛தப்பு என்ன பனியன் சைஸ்ஸா... ஸ்மால், மீடியம்ல இருக்க; விளைவுகளை பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்’ இந்த மாதிரி நிறைய டயலாக் இருக்கு. 


என் உதவி இயக்குனர்களில் வசந்தபாலன் தான் விடுமுறை குறைவாக எடுத்தவர். குறைவாக என்பதை விட, அவர் லீவு எடுத்ததே இல்லை. நான் யார் கேட்டாலும், லீவ் கொடுத்துடுவேன். நாங்கள் லீவு எடுக்க முடியாது என என் உதவி இயக்குனர்கள் இன்று கூறுகிறார்கள் என்றால், அது வேலையின் தன்மையை வைத்து சொல்கிறார்கள் என நினைக்கிறேன். மற்றபடி , யார் லீவு கேட்டாலும், நான் மறுக்காமல் கொடுப்பேன். சந்தோஷமா போய்டு வாங்க என்பேன்.


எனக்கு தெரிந்து வசந்தபாலன் லீவு கேட்டதும் இல்லை, எடுத்ததும் இல்லை. பாலசந்தர் சார் தான், எனக்கு பெரிய தூண்டுதலா இருந்தார். நான் அவரை பார்த்து வியந்த நேரத்திலேயே அவர் 30 ஆண்டுகள் வெற்றிகரமா இருந்தார். அவரை பார்த்த பிறகு,  16 ஆண்டுகள் வெற்றிகரமா இருந்தால் போதும் என்று இருந்தேன். இப்போ 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரோடு ஒப்பிடும் போது ,எனது வெற்றியெல்லாம் பெரிதல்ல. 




என் படத்தை தயாரித்து திருப்தியான தயாரிப்பாளர்களிடம் இருந்து வரும் வார்த்தைகளில், ‛எனது அடுத்த படத்தை பண்ணுங்க’ என்கிற வார்த்தை தான் எனக்கு திருப்தியாக இருந்துள்ளது. ரத்தினம் சார், சுபாஷ்கரன், குஞ்சுமோன் சார் எல்லாருமே மகிழ்ச்சியோடு இதை கூறியுள்ளனர். ஓரிருவரை  தவிர பெரும்பாலான தயாரிப்பாளர்கள், இந்த வார்த்தையை என்னிடம் கூறியுள்ளனர். அது தான் அவர்களின் மகிழ்ச்சியில் வந்த வார்த்தையாகும்,’’


என்று, அந்த பேட்டியில் இயக்குனர் சங்கர் தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். 


மேலும் படிக்க : CWG 2022 Day 4 Schedule: காமன்வெல்த் போட்டிகளில் இன்று களமிறங்க உள்ள வீரர் வீராங்கனைகள் யார் யார்?


மேலும் படிக்க : CWG 2022: ஒரே நாளில் இரண்டு தங்கம்... டேபிள் டென்னிஸ்,பேட்மிண்டன் வெற்றி - காமன்வெல்த் 3வது நாளின் முக்கிய முடிவுகள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண