இயக்குநர் ராம்


தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனிமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. ராமின் படங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பவர்களும் நேர்காணலில் அவரது உரையாடல்களால் கவரப் படுகிறார்கள்.  தற்போது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை.


ஏழு கடல் ஏழு மலை


நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  இதுவரை இப்படத்தின்  க்ளிம்ஸ் வீடியோ ஒன்றும் மறுபடி நீ என்கிற பாடலும்  வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப் பட்டு பாராட்டுக்களைப் பெற்றது. 


மானுடத்தின் காதலை பேசுகிறது இந்த படம்






 ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து முன்னதாக இயக்குநர் ராம் தெரிவித்த போது  “திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால் இது மிகத் தீவிரமான படம் இல்லை, இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியலான படம். படத்தில் நடித்த நிவின் பாலி, அஞ்சலி ஆகியவர்களே அதற்கு சாட்சி. வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும்“ என்று கூறியிருந்தார்.


சமீபத்தில் இந்தப் படம் குறித்து பேசிய ராம்  இப்படி கூறியுள்ளார் “ என்னுடைய முதல் நான்கு படங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலு ஏழு கடல் ஏழு மலை படம் உங்களுக்கு பிடிக்கும் . ஏனென்றால் இப்படம் ஒட்டுமொத்த மானுடத்திற்கான காதலைப் பற்றி பேசுகிறது” என்று ராம் கூறியுள்ளார். 




மேலும் படிக்க : Veera Serial: கண்மணியிடம் விவாகரத்து கேட்கும் ராகவன்.. வீரா சீரியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் திருப்பம்!


Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!