தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன் போதையில் விழுந்து கிடக்க மாறனும் வீராவும் அவனை வீட்டிற்கு அழைத்து வர ராமசந்திரன் ஹாலில் இருந்ததால் வீட்டிற்குள் வர முடியாமல் நின்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ராமசந்திரன் குரலை கேட்டு வெளியே வர ராகவனை ஆட்டோ பின்னாடி மறைத்து விட்டு மாறன் போதையில் வீழ்ந்து கிடப்பது போல் நடிக்கிறான்.  ராமசந்திரன் இவனை எதுக்கு மா வீட்டிற்கு கூட்டிட்டு வர என்று திட்டி விட்டு உள்ளே செல்ல ராகவன் புலம்பிய படி வெளியே வர ராமசந்திரன் திரும்பி பார்த்து விடுகிறான். 


ராகவன் குடிபோதையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து டேய் ராகவா நீயா என்று கேட்க அவன் எனக்கும் கண்மணிக்கும் சரி வராது, எங்களை பிரிச்சி விட்டுடுங்க என்று புலம்புகிறான். எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆக்சிடென்ட் தான், இது மட்டும் நடக்காமல் இருந்தால் கண்மணி அவனுக்கு பிடித்தவனோடு சந்தோசமா வாழ்ந்து இருப்பா.. இனிமே இந்த வாழ்க்கை செட் ஆகாது பிரிச்சி விட்டுடுங்க என்று விவாகரத்து கேட்க வள்ளி கண்மணியை பிடித்து திட்டுகிறாள். 


அடுத்து ராஜேஷின் அம்மா நீ பண்ண வேலை பார்த்தாயா.. பிரிச்சி விட்டுடுங்கனு சொல்ற அளவுக்கு வந்து இருக்கான் என்று சொல்ல கண்மணி இதுக்கு ஒரு வழி பண்றேன் என்று சொல்கிறாள். மறுநாள் காலையில் ராகவன் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க கண்மணி, நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் என்று மன்னிப்பு கேட்டு அவனை நெருங்கி வர ராகவன் இனிமே நமக்கு செட்டாகாது என்று விலகி செல்கிறான். 


இந்த நிலையில் கண்மணி அவனை கட்டி பிடித்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து விடுகிறாள், மறுபக்கம் மாறன் தூக்கத்தில் இருக்க பேங்கில் இருந்து பேசுவதாக சொல்லி பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாறனுக்கு இன்னைக்கு பிறந்த நாள் என்ற ஞாபகம் வருகிறது. கீழே எல்லாரும் தனக்கு வாழ்த்து சொல்ல தயாராக இருப்பாங்க என்று ஆசை ஆசையாக இறங்கி வருகிறான். 


மாறன் கீழே வர வள்ளி விதவிதமாக சமைத்திருக்க மாறன் எல்லாம் தனக்காக தான் நினைத்து பேச ஊரில் இருந்து கண்ணன் மாமா வராரு அவருக்கான தான் என்று சொல்லி பல்பு கொடுக்கிறாள். பிறகு ராகவன் ஓடி வந்து மாறனை கட்டி பிடிக்க மாறன் வாழ்த்து சொல்ல தான் கட்டி பிடிக்கிறான் என்று நினைத்து சந்தோசப்பட கண்மணியும் நானும் சேர்ந்துட்டோம். அதுக்கு நீ தான் காரணம் என்று சொல்கிறான். 


அடுத்து கார்த்திக் நண்பனிடம் போனில் பேசியபடியே மாறனுக்கு கை கொடுத்து பர்த் டே ட்ரீட் இல்லையா என்று கேட்க மாறன் தன்னை கேட்பதாக நினைத்து பதில் சொல்ல பிறகு போனில் பேசுவதாக சொல்லி அவனும் பல்பு கொடுக்கிறான். இதனால் மாறன் அம்மா போட்டோ முன்னாடி நின்று யாருக்குமே என் பிறந்த நாள் நியாபகம் இல்ல என்று வருந்துகிறான். அடுத்து கடைக்கு கிளம்பி கடை மொத்தமும் திருவிழா கோலத்தில் இருக்க மாறன் உள்ளே வந்ததும் பலூன் வெடித்து பூ கொட்டுகிறது.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.