Pongal Parisu Thogai: பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000.. முதலமைச்சர் அறிவிப்பு..

Pongal Parisu Thogai 2024: பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

Pongal Gift 1000 Rupees: பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. கடும் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவித்த அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்  என அறிவிப்பு வெளியிட்டது. 

ஆனால் தற்போது மக்களின் கோரிக்கை முன்னிட்டு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

Continues below advertisement