Neeya Naana Gopinath: தனது மனைவியை தன்னோட அப்பா போல் பார்ப்பதாக கூறி கண்ணீருடன் கோபிநாத் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இன்று பெரும்பாலான மக்களால் நீயா நானா நிகழ்ச்சியின் வழியாக அறியப்படுகிறார் கோபிநாத். ஊடகத்  துறையில் ஆண்டுகளைக் கடந்துள்ள கோபிநாத் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். மக்கள் யார் பக்கம், சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, என் தேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் கோபிநாத்.


இந்த நிலையில் ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த,” கோபிநாத் 25” என்ற பெயரில் தொகுப்பாளர் கோபிநாத் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கோபிநாத்தின் மனைவி, சித்தப்பாக்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய கோபிநாத், ” எல்லாரும் பொண்டாட்டியை அம்மா மாதிரி பார்ப்பதாக சொல்வாங்க. ஆனால், அவளை நான் என் அப்பா போல் பார்க்கிறேன். வீட்ல இருந்து கிளம்பும்போது அழுதிடாதிங்கன்னு என் மனைவி சொன்னாங்க. நான் கல்லு அழ மாட்டேன் என்றேன். வீட்டில் இருந்து கிளம்பும் போது என் அப்பா இல்லை என்று தான் தோன்றியது. ஆனால், என் அப்பா இடத்தில் இவர்கள் உள்ளது ரொம்ப சந்தோஷம். பப்ளிக் பிளேஸ்க்கு செல்லும்போது, அவர் உயரத்தில் வழுக்கையாக சிகப்பாக இருக்கும் ஆட்கள் என் அப்பா போல் தோன்றும்” என கூறியுள்ளார். 

 

தனது மனைவி மற்றும் தந்தை பற்றி கோபிநாத் பேசும்போது மனம் உடைந்து அழுது விட்டார். கோபிநாத்தின் கண்ணீரை பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கண் கலங்கினர்.  கோபிநாத்தின் மனைவி பற்றி அவரது சித்தப்பா பேசும்போதும், கோபிநாத்தின் பாதி சுமையை அவரது மனைவி தான் சுமக்கிறார் என்றனர். 

 

தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா, நிகழ்ச்சியில் பல்வேறு சமூக தரப்பினர்களுடன் பல்வேறு சமூக பிரச்சனைகளை விவாதித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கி இருக்கின்றன. ஊடகத் துறைத் தவிர்த்து பாஸ்வர்ட், ப்ளீஸ் இந்த புக்க படிக்காதீங்க உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனும் பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதித்து வருகிறார்.