என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான பாரதிராஜாவுக்கு பள்ளியில் படிக்கும்போதே இலக்கியத்தின் மீது ஈடுபாடு. சினிமா மீது பாரதிராஜாவுக்கு இருந்த காதல் அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. பல இடங்களில் அலைந்து திரிந்த இவர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றார். 


 சினிமா மீது இவர் கொண்ட காதல் அவர் சினிமா கனவை விரைவிலேயே சாத்தியப்படுத்தியது. 1977ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார். கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தில், ஸ்ரீதேவியை மயிலாக உலவவிட்டிருந்தார். அப்போது, கதாநாயகனாக கலக்கி வந்த கமலை சப்பாணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என உணர்வுகள் இழையாடும் காலத்தால் என்றும் அழியாத பல திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் உருவானவை. இவர் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் எனலாம்.


வைரமுத்து, பாக்யராஜ், மணிவண்ணன் , மனோபாலா, என எண்ணிலடங்கா கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். 20-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளுக்கான தமிழ் சினிமா கதாநாயகிகள் ராதிகா, ராதா, ரேவதி, வடிக்கரசி என பெரும்பாலும் இவர் பட்டறையில் வளர்ந்தவர்கள்.


6 தேசிய விருது,பத்ம ஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசின் மாநில விருது, உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பாரதிராஜா, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


பாரதிராஜாவின் ஒவ்வொரு திரைப்படமும் கருத்து, சிந்தனை,  உணர்வுப்பூர்வமான கதைக்களம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.  இயற்கை காட்சிகளை கண்முன்னே நிறுத்தி, உணர்வுகளை மனதில் உலவ விட்டு பார்ப்பதில் கெட்டிக்காரரான,இயக்குனர் இமயம் பாரதி ராஜாவை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறது ஏபிபி நாடு. 


மேலும் படிக்க 


CM Stalin On ED Raid: ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை.. பயமுறுத்த பாக்றாங்க, பலிக்காது - பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்


Ponmudi ED Raid: அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கவுண்டவுன் தொடங்கியது - தலைவர்கள் கண்டனம்..!