வாழை


மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


கலங்கி நின்ற பாலா






வாழை திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் சில நாட்கள் முன்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகின் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திரையரங்கில் படம் பார்த்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்வையிட்ட இயக்குநர் பாலா வாழை படத்தைப் பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜை கட்டி அனைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படம் பார்த்து நீண்ட நேரமாக பேச வார்த்தை இல்லாமல் பாலா மாரி செல்வராஜின் கைகளை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டு சென்றார். 


வாழை திரைப்பட விமர்சனம்


பரியேறும் பெருமாள், கர்ணன் படம்போலவே திருநெல்வேலியே இந்த படத்திற்கும் கதைக்களம். பள்ளி சிறுவனான சிவனைந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.


மேலும் படிக்க : Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!