தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் நடிகர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்- பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவுடன் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- மேலும் பாலியல் குற்றங்களுக்கு குடிப்பழக்கம் போதைப் பழக்கம் காரணமாக உள்ளது என தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி.

Continues below advertisement

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்,பொது வாழ்விலே மக்கள் பணியாற்றுவதற்கு ஜனநாயகத்தில் அனைவருக்கும் இடம் உண்டு அந்த வகையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை துவக்கி நடிகர் விஜய் நடத்தி வருகிறார். இதன் கட்சிக்கொடி அறிமுக விழா இன்று நடைபெறுகிறது, இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணி இயக்கப் பணி இதன் அடிப்படையில் மக்களுடைய நம்பிக்கையை பெற வேண்டும். மக்கள் குரலே மகேசன் குரல் என்று கூறுவோம் அந்த வகையிலே மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களுக்கு வாக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Continues below advertisement

பாலியல் தொந்தரவு என்பது உலக அளவிலேயே இருக்கக் கூடாது. தனிமனித ஒழுக்கம் தான் என்பதில் இதற்கு மாற்று கருத்து கிடையாது ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர் முதல் நிலைகளிலேயே தெரிந்தாலே அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும், அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படை பயம் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு போதை பொருட்கள் பழக்கம் குடிப்பழக்கம் காரணமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவே அவைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.