தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். சமீபகாலமாக நடிகராகவும் பரிமாணம் எடுத்துள்ள இவர் பீஸ்ட், சாணிக்காயிதம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.






இந்த படத்தின் டீசர் ஏற்கனவே யூ டியூபில் வெளியாகியது. இந்த நிலையில், பகாசூரன் படம் எப்போது? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு செல்வராகவன் இனிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக, செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.


மோகன் ஜி:


இந்த திரைப்படம் உருவானது முதல் பலத்த எதிர்பார்ப்புகளும், சர்ச்சைகளும் உருவாகியது. இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் மோகன் ஜி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை எனும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.


இதைத்தொடர்ந்து கடந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு இயக்கிய திரௌபதி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிச்சர்ட் ரிசி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளும், வசனங்களும் பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.


பகாசூரன்:


வட தமிழகங்களில் பல திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு இவர் இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படமும் திரௌபதி படத்தை போலவே சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது.


மோகன் ஜி தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்புகளும் பலமாக எழுந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படம் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகியிருந்தது.


இந்த நிலையில், பகாசூரன் படம் வரும் பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியாக உள்ளது. பகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவனுடன் இணைந்து நட்டி என்ற நடராஜன், லாவண்யா, ராதாரவி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மோகன் ஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தை மோகன் ஜி யே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Dhoni Entertainment : தோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி


மேலும் படிக்க: Judo Rathnam Death: "கடுமையான உழைப்பு என்பது ஆரோக்கியத்துக்கான வழி என வாழ்ந்தவர் ஜூடோ ரத்தினம்" - கமல் இரங்கல்..!