விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறும் மத்திய அரசு கீழ்த்தட்டு மக்கள் முன்னேறி வருவதற்கு தடையாக உள்ள நீட் தேர்வை என் ரத்து செய்வது இல்லை என்று தான் கேட்கிறோம்.


தாய் பால் என்பது குழந்தைக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் எங்களுக்கு தாய் மொழி தமிழ் கூட, ஹிந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள் ஆனால் ஹிந்தி படித்தவர்கள் இங்கு தமிழ் நாட்டில் வந்து ஹோட்டல்கள், பல்வேறு நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். அமைச்சர் டீ கடைக்குச் சென்று டீ ஆற்றுகிறார் என்று விமர்சனம் வைக்கிறார்கள், நான் டீ கடைக்கு தான் செல்கிறேன் வேற கடைக்குள் செல்லவில்லை,வேறு கடைக்குச் சென்றால்தான் தப்பு, எனக்கு தெரிந்து வேலையை நான் செய்கிறேன், அங்கு சென்று கழக நிர்வாகிகளை சந்திக்கிறேன், அங்குள்ள டீ மாஸ்டரை சந்தித்து அவருக்கு என்னுடைய கையால் டீ போட்டு தருகிறேன் இதற்கு ஒரு விமர்சனம், மார்ச் மாதத்திற்குள் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதிக்கு 100 கோடி அளவில் நிதி பெறப்ட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும், நீங்கள் அமைச்சராக இருந்த போது எதை இங்கு சுற்றினிரகள் என்று உங்களுக்கு தான் தெரியும்" என பேசினார்.


 


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.