தசாவதாரம் படம் வெளியாகி நேற்றோடு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், படத்தில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் குறித்து தற்போது பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அந்த பதிவிற்கு ஒரு பிரபல இயக்குநர் அளித்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகின்றது. 'எனது கலையுலக அண்ணா கமல்ஹாசன் தான்' இது பிரபல நடிகர் ரஜினிகாந்த் கூறியது. 'அவன் குருவை மிஞ்சிய சிஷ்யன்' இது கமலின் குருநாதர் பாலசந்தர் கூறியது. இன்று வரை இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான (திரைக்கதை மற்றும் தொழில்நுட்பம்) படங்களை வரிசைப்படுத்தினால் அதில் அதிகபட்சமாக கமலின் படங்கள் இருக்கும் என்பதில் சற்றும் மாற்றமில்லை.  


 



ஐந்து வயது முதல் ஆடிவரும் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் எழுத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் தான் தசாவதாரம். ரங்கராஜா நம்பி, பூவராகன்,காலிஃஉல்லா, கிறிஸ்டன் பிளெட்சர், அவ்தார் சிங், கிருஷ்ணவேணி பாட்டி, பல்ராம், ஷின்ஜென், அதிபர் புஷ் மற்றும் கோவிந்தராமசாமி என்று 10 வேடங்களில் தோன்றி அந்த திரைப்படத்தில் அசத்தியிருந்தார் கமல். Butter Fly Effect என்ற கான்செப்டில் வெளியான வெகு சில இந்திய திரைப்படங்களில் தசாவதாரம் படமும் ஒன்று. இந்நிலையில் அந்த படத்தில் பூவராகவன் மற்றும் கோவிந்த் ஆகிய கதாபாத்திரங்கள் உருவான விதம் குறித்து அவர் ஒரு பதிவை வெளியிட்டார் கமல்.  




Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்


இந்நிலையில் அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் 'சார்.. மைக்கேல் மதன காமராஜனை எப்படி ஒரே காட்சியில் படம்பிடித்தீர்கள் என்று சொல்லமுடியுமா?. அந்த திரைப்படமே ஒரு பட்டபடிப்பிற்கு சமம். தசாவதாரம் என்பது சினிமா துறையில் ஒரு PhD' என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 1990ம் ஆண்டே 4 வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து கமல் அசத்திய திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராஜன். இன்றளவும் ரசிக்கப்படும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நான்கு கமல்ஹாசனும் ஒரே ஷாட்டில் தோன்றும் அந்த காட்சி இன்றும் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 


உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளை துவங்கியுள்ளார். பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே 1986ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் அமையும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதை படக்குழு மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் திரில்லர் படமான விக்ரம், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.