தளர்வுகள் அளித்துவிட்டார்களே என மக்கள் அவசியமின்றி வெளியே வராமல் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிகமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத்  தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தன. 


27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீ கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, டீ கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல் முறையில் தேநீர் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.


Coronavirus Curfew in Tamil Nadu: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்; டீ கடைகள், சலூன் திறக்கப்பட்டன!


இந்நிலையில், கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! என்ற தலைப்பில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 






அந்த வீடியோவில் பேசிய முதலமைச்சர், “கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம். தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வாரங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 50,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரித்த நிலையில் 15,000க்கு கீழ் தொற்று பதிவாகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை இப்போது இல்லை. கொரோனா கட்டுக்குள் வந்தாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தளர்வுகளில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியாமல் மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். ஊடங்கு விதிகளை கடைப்பிடித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சலூன் கடைகள், டீ கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.




பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழகத்தை சீரழித்துவிட்க் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். விரைவில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி, பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும். கொரோனா ஒழிக்கப்பட வேண்டும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாக் கூடாது. காவல்துறை இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது. மக்கள் சக்தியே உயர்ந்தது” என்று பேசினார்.


Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது