திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் அருள்மிகு இடும்பன் திருக்கோயிலில் ஜித் சினிமாஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்திற்கான பட பூஜை நடைபெற்றது.
தப்பாட்டம், குற்றப் பின்னணி , வீமன், தென் தமிழகம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஜித், இசையமைப்பது மட்டுமல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும் புதிய பரிமாணம் ஏற்றுள்ளார். இப்படத்திற்கு கதை நிகரிக மஞ்சு எழுதியுள்ளார்.
மலையாள திரைப்படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் இதில் பங்கேற்றனர். பட பூஜையில் லைன்ஸ் கிளப் இன் தலைவர் சுப்புராஜ் (பழனி லயன்ஸ் கிளப் தலைவர் மற்றும் சாய் மகளிர் மருத்துவமனை) தொழிலதிபர்கள் அரிசி கடை பாஸ்கர், திரு மடத்துக்குளம் தம்பிதுரை, மயில்சாமி, உடுமலை மணி, இயக்குனர்கள் ராம் சிவா, முரளி பாண்டியன், கணேசன், வெண்ணிலா ரவி, இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் நடிகர்களான பொள்ளாச்சி ராஜன், ஆர்கே ஸ்டுடியோ ராம்குமார், தயாரிப்பாளர்கள் ஈரோடு பாஸ்கர், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரையும் புதுக்கோட்டை கவிஞர் விடிவெள்ளி வரவேற்று பேசினார். மேலும் கோவிலில் பட பூஜை மட்டும் நடத்தி கோவில் விதிகளுக்கு கட்டுப்பட்டு சிறப்பாக நடைபெற்றது கோவில் விதிகளுக்கு உட்பட்டு சூட்டிங் எதுவும் செய்யப்படாமல் பூஜை மட்டும் செய்தனர். இதற்கான அனுமதிகளை சிறப்பாக வழங்கி பழனிவாள் மக்களுக்கு பெரும் ஆதரவு நல்கியும் சிறந்த ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வாழ்த்தி வரவேற்பு ஏற்பாடுகளை மதுரை அரசு வழக்கறிஞர் கல்லூரியின் பேராசிரியரும், வழக்கறிஞரும் அருள்மிகு இடும்பன் திருக்கோவிலின் அறங்காவலரும் ஆகிய ராஜா சிறப்பாக செய்து கொடுத்தார்,
CBSE Exam Result 2024: சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
திரைப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் ஜித் கூறும் பொழுது, குழந்தைகளை மதிக்கும் தகப்பன். பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகள் பெரும் ஆபத்திலிருந்து தவிர்க்கப்படுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாக தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் சிறப்பாக படப்பிடிப்பு செய்து தெளிவான ஒரு விழிப்புணர்வான திரைப்படத்தை வழங்க உள்ளதாக தெரிவித்தார். இத்திரைப் படத்தில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாகவும் கூறினார் . படம் ஜூன் மாதத்தில் வெளிவர உள்ளது என்பதையும் தெரிவித்தார்.