இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கென்று தனி பக்கங்கள் உண்டு. அனைத்து வகை ஃபார்மெட்டுகளிலும் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தந்தவர் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு புகழாரம் சூட்டுவது வழக்கம். அவரது விளையாட்டுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தோனியின் விளையாட்டை மட்டும் அவர்கள் ரசிப்பதோடு மட்டுமின்றி தோனி அணியை வழிநடத்திய முறை, பிறரிடம் பழகும் முறை என அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கொண்டாடுவர்.
தோனிக்கு வெகுஜன மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தோனிக்கு அளவுக்கதிகமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும்கூட, கபில்தேவுக்கு பிறகு நான் தோனியின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
அவர் மட்டுமின்றி நடிகர் விஜய், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு என தோனியின் ரசிகர்களாக இருக்கும் திரையுல பிரபலங்களின் பட்டியல் நீளும். சமீபத்தில்கூட பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தின் அருகே நடந்த ஒரு விளம்பர பட ஷூட்டிங்கிற்காக தோனி வந்திருந்தார்.
மேலும் வாசிக்க: RRR Movie Release Date: வலிமைக்காக பேசிய சிவா.! ஆனா கொரோனா வைத்த ட்விஸ்ட்! ஆர் ஆர் ஆர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அப்போது அவரும், விஜய்யும் சந்தித்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதுவராக நடிகர் விஜய் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விக்ரமும், தோனியும் சந்தித்திருக்கின்றனர். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த எம்.எஸ். தோனி தற்போது ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்