இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி விலகினார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின்னர் விராட் கோலி தன்னுடைய இந்த முடிவை அறிவித்திருந்தார். அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது. 


 


இந்நிலையில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”எனக்கு விராட் கோலியின் அந்த முடிவு மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியின் போது நான் விராட் கோலியிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலக பரிசீலித்து வருவதாக கூறினார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வழி நடத்த மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். 


 






அதுமட்டுமல்லாமல் விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி பல சாதனைகளை படைத்திருந்தது. எனினும் அவருடைய முடிவை நான் மதிக்க வேண்டும். நான் கேப்டனாக இருந்த போதும் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது கடினமாக தான் இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கேப்டன் பதவியில் நீடித்திருக்கலாம் என்று தோன்றியது. என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணி தான் கேப்டனாக செயல்பட மிகவும் கடினமான அணி. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பலரும் பின் தொடர்வார்கள். ஆகவே இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. விராட் கோலிக்கு தற்போது 33 வயதாகிறது. அவர் இன்னும் சில ஆண்டுகள் பல ரெக்கார்டுகளை உடைப்பார் என நம்புகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். 


 


இந்திய கிரிக்கெட் அணியை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 42 மாதங்கள் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்..! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்..!