Just In





Dhanush Vathi Teaser: வெளியானது தனுஷின் வாத்தி திரைப்பட டீசர்!
Dhanush Vathi: நடிகர் தனுஷின் வாத்தி திரைப்பட டீஸர் வெளியானது.

பிரபல நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அடுத்தடுத்த தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து அடுத்த மாதம் வெளியாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்றாவது சிங்கிள் வெளியாகியிருந்தது.
இப்போது வாத்தி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. கல்வி என்பது பாடப்புத்தில் இருப்பது மட்டும் இல்லை; கல்வி என்பது புத்தகங்கள், மார்க் மற்றும் தேர்வு முடிவுகள் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப்படம் தொடர்பான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
.இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்