தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு உருவாகிய திரைப்படம் 3. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக, ஒய் திஸ் கொலவெறி பாடல் அப்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்தது.




சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.  கோகோ கோலா குளிர்பானத்திற்காக துருக்கி நாட்டில் உருவாக்கப்பட்ட விளம்பர பாடல் ஒன்றில் இருந்துதான் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல் உருவாகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே காபி அடிப்பதில் கிங் என்று விமர்சனத்திற்குள்ளாகி வரும் அனிருத், இதனால் சமூக வலைதளங்களில் மேலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.






ஆனால், உண்மையில் இந்த துருக்கி விளம்பரம் 2015ம் ஆண்டு வெளியாகியது. ஒய் திஸ் கொலவெறி பாடலில் இருந்துதான் இந்த கோகோ கோலா விளம்பர பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் உருவாக்கம் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுக்குள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




தனுஷ் நாயகனாகவும், சுருதிஹாசன் நாயகியாகவும் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாகியிருந்த 3 படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். அவர் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவும், தனுஷ் இடையே விவகாரத்து நடைபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Chinmayi Controversial Tweet: இவங்களோட இருக்குறதுக்கு தெருநாயோட இருப்பேன்.. ராதாரவியை தாக்கிய சின்மயி.. வைரலாகும் ட்வீட்..!


மேலும் படிக்க : Jayaram on ponniyin selvan: தினமும் ஷேவ் பண்ணனும்.. ஒன்றரை வருஷத்துக்கு மொட்டை தலைதான்.. பொன்னியின் செல்வன் குறித்து ஜெயராம் பேட்டி..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண