பிரபல பாடகி சின்மயி ராதாரவியை தனது ட்விட்டர்  பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “உண்மையில் மனிதர்களைவிட நாய்கள் பெண்களுக்கு நம்பகமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு ரூமில் ராதாரவி அல்லது தமிழ் கவிஞருடன் இருப்பதை விட ஒரு தெருநாயுடன் உடன் இருக்கும் போது நான் பாதுகாப்பாக இருப்பேன். எந்த பெண்ணிடம் வேண்டுமென்றாலும் கேளுங்கள்” என்று என்று பதிவிட்டு இருக்கிறார். 


 






தொடர்ந்து சர்ச்சைக்கருத்துகளை பதிவிட்டு வரும் சின்மயி அண்மையில் ஆண்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டு பேசியிருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை பிரியாணி மேன் என்பவர் கொச்சையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது. சின்மயி குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசஙளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்மயி இந்தக்கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


 






தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து பல பாடல்களை பாடிய சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார். அவரது இந்த குற்றசாட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. இந்த விவகாரத்தில் நடிகர் ராதாரவி சின்மயியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.