பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் YNOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. லண்டன் தாதாவாக களமிறங்கும் தனுஷின் அசத்தலான நடிப்பில் பட்டையை கிளப்பும் ட்ரைலராக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தனுஷ் எழுதி பாடிய 'நேத்து, ஓர கண்ணில் நான் உன்ன பாத்தேன்.. நேத்து, ஜட செஞ்சு நீ என்ன பாத்த..' என்ற வீடியோ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  






2016ம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்து post production பணிகள் தொடங்கப்பட்டது.       
       
அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது.





இறுதியில் தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


‛நான் உன்னை விரும்பல... அழகா இருக்கேன்னு நெனைக்கல...’ ஆனாலும் 51வது வயதில் மாதவன்!






வருகிற  ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ தகவலை ஒய் நாட் ஸ்டுடியோ (y not studio ) தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இந்தப்  படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 


இறுதியாக கர்ணன் படத்தில் தோன்றிய தனுஷ் தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று படு பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.