இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது ராயன் என்ற படத்தில் இயக்கியதோடு மட்டுமல்லாமல் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அவரி 50வது படமாகும். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனுஷ் நீண்ட நாட்களாகவே இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உலாவி வந்தது. 






தனுஷூக்கு எந்தளவுக்கு இளையராஜாவை பிடிக்கும் என கேட்டால், அவர் தன்னுடைய படங்களில் இருக்கும் பாடல்களை விட இளையராஜா பாடல்களையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி அசத்துவார். இப்படியான நிலையில் தனுஷ் நேற்று தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதில் கிட்டார் போட்டோ இடம்பெற்றிருந்தால் அதில் இளையராஜா பயோபிக் தான் என ரசிகர்கள் கணித்தனர்.  






இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே இளையராஜா படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படமானது பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.  நான் இளையராஜாவின் ரசிகன், பக்தன். அவரின் இசை தான் எனக்கு துணை என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Dhanush: இளையராஜாவாக நடிக்க தூக்கம் தொலைத்த தனுஷ்.. நெகிழ்ந்து போன இசைஞானி!