சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, அரசு தலைமை கொறடா & வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதன் பிறகு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதா நாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? | DMK Election Manifesto Highlights
- மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
- மாநில முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- ஆளுநர்களூக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
- உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.
- இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
- மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- தாயகம் திரும்பிய மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை.
- புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்
- பெண்களூக்கான இட ஒதுக்கீடு 33% உடனடியாக அம்ல்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
- மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
- ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
- இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்:
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
- வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
- ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் நீக்கப்படும்
- குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்
- ஒன்றிய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
- தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் முக்கியத்துவம் பாதுகாக்கப்படும்
- சிலிண்டர் விலை 500 , பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்களாக குறைக்கப்படும்
- பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் தவறாக படித்துவிட்டார்
- மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரீசிலனை செய்யப்படும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
- சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்