குஷி படத்தின் நல்ல வரவேற்பை தொடர்ந்து தெலுங்கானாவில் உள்ள பிரபல கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற விஜய் தேவரகொண்டா, அங்கு சாமி தரிசனம் செய்தார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஷிவா நிர்வானா இயக்கி இருக்கும் குஷி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சாகுந்தலம் படத்தின் தோல்விக்கு பிறகு சமந்தாவும், லைகர் தோல்விக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவும், டக் ஜகதீஷ் தோல்விக்கு பிறகு ஷிவா நிர்வானாவும் அடுத்ததாக இணைந்த திரைப்படம் குஷி. தோல்விக்கு பிறகு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடித்த படம் குஷி.


மாதவன் - ஷாலினி நடித்த அலைபாயுதே படத்தை போல் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் தம்பதிகளாக விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் வாழ்கின்றனர். திருமண வாழ்க்கையில் இருவருக்கும் வரும் பிரச்சனைகளை கூறுவதே படத்தின் கதையாக உள்ளது. மணிரத்னத்தின் பம்பாய் படத்தை போல் காஷ்மீர், முஸ்லீம் பெண் என படத்தின் இடம்பெற்றுள்ள காட்சிகளும், திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் பிரச்சனை வருவதும், குஷி காப்பி படம் என்று எதிர்மறையான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. 


எனினும், விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்குமான காதல் காட்சிகளாக குஷி 2கே கிட்ஸ் கொண்டாடும் படம் என்றே கூறப்படுகிறது. இதனால் குஷி வெளியான இரண்டே நாளில் ரூ.51 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஷி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா கோவிலுக்கு சென்றுள்ளார். தெலுங்கானாவில் உள்ள பிரபலமான யதாத்ரி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற விஜய் தேவரகொண்டா, பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். 



 


குஷி படத்தின் மூலம் டிரெண்டிங்கில் இருக்கும் விஜய்தேவரகொண்டா, தனது காதல் குறித்து அறிவித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ‘என் வாழ்க்கை என் சந்தோஷம்’ என கூறியுள்ளார். மேலும், இது குறித்த அப்டேட்டை விரைவில் கொடுப்பேன் என்றும் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 






 


மேலும் படிக்க: Kushi Box Office: அமர்க்களமான ஓப்பனிங்.. சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' 2 நாள்கள் வசூல் இவ்வளவா?


Iraivan Trailer: ஒன் டூ த்ரீ.. முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் வெளியீடு!