Pawan Kalyan : லட்டு விஷயத்தை விடுங்கள்... யோகிபாபு நடிப்பை பவன் கல்யாண் பாராட்டியதை பாருங்கள்

யோகி பாபுவின் மண்டேலா படம் தன்னை கவர்ந்த படங்களில் ஒன்றென ஆந்திர துணை முதலமைச்சர் நடிகர் பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

பவண் கல்யாண்

நடிகர் மற்றும் அந்திர துணை முதலமைச்சருமான பவண் கல்யாண் சமீப காலத்தில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர். திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதை பரிசோதனைகள் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கினார். இதற்கு பிராயசித்தமாக தான் 11 நாள் விரதம் இருந்து நேற்று செப்டம்பர் 2 ஆம் தேதி விரதத்தை முடித்து வைத்தார்.  திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் அவர் நடிகர் கார்த்தியை கடுமையாக விமர்சித்தது ரசிகர்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சமாதானம் சொல்லும் வகையில் அவரது சமீபத்திய நேர்காணல் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு தமிழ் திரைபிரபலங்களைப் பற்றி பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Continues below advertisement

லியோ படத்தை பாராட்டிய பவண் கல்யாண்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்பட தனக்கு பிடித்ததாக இந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனை தான் நேரில் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் என கூறியிருந்தது கமல் ரசிகர்களை சாந்தப்படுத்தியது.

யோகிபாபு நடிப்பை பாராட்டிய பவன் கல்யாண்

தொடர்ந்து பேசிய அவர் யோகிபாபுவின் நடிப்பு தனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்தார். யோகி பாபு நடித்த மண்டேலா படம் தன்னை அதிகம் கவர்ந்ததாக அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு பவன் கல்யானுக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்தார். யோகி பாபு நடித்துள்ள போட் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க : Watch Video : விழா மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை பிரியங்கா மோகன்... என்னாச்சு? அதிர்ச்சி வீடியோ!

Jani Master : போக்சோவில் கைதான ஜானி மாஸ்டருக்கு தேசிய விருதா..? ஜாமீன் வழங்கி வழியனுப்பிய நீதிமன்றம்

Continues below advertisement
Sponsored Links by Taboola