பிரியங்கா மோகன்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கும் அவர் இன்று தெலங்கானாவின் மால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்களும் பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில நபர்கள் மட்டுமே நிற்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த இந்த மேடையில் அதிகளைல் ஆட்கள் நின்றது மேடை சரிந்ததற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகையின் நிலைமை பற்றி ரசிகர்கள் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நலமாக இருப்பதாகவும். லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டிருப்பதாக பிரியங்கா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.