ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில், அஷ்வின் சரவணனின் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம், கனெக்ட். இப்படத்தின் ப்ரீமியர் ஷோ இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது; இதில் படத்தை பார்த்திருந்த பத்திரிகையாளர்கள், கனெக்ட் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களை கொடுத்தனர். கனெக்ட் படம் இன்று வெளியானதையடுத்து, ரசிகர்களிடமிருந்தும் நல்ல முறையிலேயே விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. கனெக்ட் படத்துடன் சேர்ந்து ரிலீஸாகியுள்ள படம் லத்தி. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு, ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
கதைகள் என்ன?
நயன்தாராவின் கனெக்ட் படம், மக்களை பயமுறுத்தும் பேய் படமாக உருவாகியுள்ளது. கொரோனா காலத்தில், தந்தையை இழக்கும் மகள் அவருடன் பேச முயற்சி செய்கையில், அவருக்குள் பேய் புகுந்து கொள்கிறது. அந்த பேயை விரட்ட, பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார், கதையின் நாயகி நயன்தாரா. இதுதான் கனெக்ட் படத்தின் கதை
முழு விமர்சனம்: Connect Movie Review: நயனின் ‘கனெக்ட்’ நமக்கு கனெக்ட் ஆனதா? - ரிலீஸூக்கு முன்பான எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் இங்கே!/
கான்ஸ்டபிள் கதாப்பாத்திரத்தில் விஷால் நடித்திருக்கும் படம்தான் லத்தி. வில்லனுக்கும் ஹீரோவுக்குமான பகை மற்றும் வஞ்சம் ஆகியவற்றை சுற்றி நகரும் இக்கதையில், இறுதியில் வென்றது யார் என்பதுதான் மீதிகதை.
முழு விமர்சனம்: Laththi Movie Review: தொடர் தோல்வியில் இருந்து மீண்டாரா விஷால்? - ‘லத்தி’ சார்ஜ் செய்ததா? - நறுக் விமர்சனம்!
கனெக்ட் படத்திற்கான விமர்சனங்கள்!
கனெக்ட் படத்தை பல வருடங்களுக்கு முன்பு வெளியான எக்ஸார்சிஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு, இப்படம் அதன் மார்டன் வர்ஷனாக இருப்பதாக சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.
கனெக்ட் படத்திற்கு படத்தின் நாயகி நயன்தாராவிற்காகவே பலரும் முதல் நாள்-முதல் ஷோவிற்கு சென்றதாக சிலர் தெரிவித்திருந்தனர். தாங்கள் எதிர்பார்த்திருந்தது போலவே, நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிம்பிளான கதையை, இயக்குனர் அஷ்வின் சரவணன் அபாரமாக கூறியுள்ளதாகவும், பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் சிலர் தங்களது கருத்தினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
லத்தி படத்திற்கான விமர்சனம்
விஷாலின் லத்தி படம், பார்ப்பவர்களுக்கு கூஸ் பம்ப்சை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விஷால் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என சிலர் தங்களது ஆதங்கத்தினை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
லத்தி படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும், தங்களது ரோல்களை சிறப்பாக செய்துள்ளதாக ஒரு ரசிகர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில், இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளதால், இப்படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. ஆனால், கனெக்ட் மற்றும் லத்தி படங்களில் எது ரசிகர்களின் மிகுந்த வரவேற்ப்பை பெறும் என்பது இன்னும் சிறிது நாட்கள் கழித்தே தெரிய வரும்.