திருப்பதி கோவிலில் எப்போதும் மக்கள் கூட்டம் இருப்பது வழக்கம். இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில்  ஒன்று திருப்பதி. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அர்ச்சனா கவுதம் சுவாமியை தரிசனம்  செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார்.


அங்கு சென்ற அவரிடம் , டிக்கெட் இல்லை என பதலளித்து அசிங்கபடுத்தியுள்ளதாக அர்ச்சனா கௌதம் வீடியோ ஒன்றில் பேசி  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 






இவர் முன்னதாக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஹஸ்தினாபுர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார். கடந்த வாரம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். சிபாரிசு கடிதத்தை கையில் எடுத்த சென்ற இவரை, கோவில் அதிகாரிகள் தவறாக பேசியதாக குற்றம் சாட்டுகிறார் அர்ச்சனா. 






10 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்த பின், 500  ரூபாய் செலுத்தி வி.ஐ.பி டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்ததாகவும், இதனால் அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கடும் வாக்குவாதத்தில் முடிந்ததாகவும் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் அங்கு பணியிலிருந்து கோயில் ஊழியர்கள் தன்னிடம் அநாகரீகமாக நடந்ததாகவும், அவற்றை தனது போன் கேமராவில் பதிவு செய்து, அந்த  வீடியோயை தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அங்கு என்ன நடந்தது என்று தெளிவாக விளக்கி பதிவிட்டுள்ளார் நடிகை அர்ச்சனா கெளதம்.


 






மேலும் படிக்க : ‛ஹிரித்திக் மற்றும் விக்கி கெளசலை ரொம்ப பிடிக்கும்’ - ஓப்பனாக பேசிய தமன்னா!


VJ Mahalakshmi : புதுவீட்டில் குடியேறிய சீரியல் நடிகை..காதலனுடன் திருமண வாழ்வை துவங்கும் மஹா!