வாட்ஸ்அப், தனது அடுத்த அப்டேட்டில் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்:


மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், ப்ரீமியம் சப்ஸ்கிருப்சனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த வசதியானது வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த அப்டேடானது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும், அது தொடர்பான வேலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வாட்ஸ் அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது.


வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத் தள்ள முடியவில்லை. தினம் தினம் புது புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.


வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமே இல்லாமல் பிசினஸ் பார்வையிலும் வாட்ஸ்அப் பெரிய அளவில் பயன்படுகிறது. வாட்ஸ் அப் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டா போன்ற அனைத்து தளங்களையும் பிசினஸ் கோணத்திலேயே அணுகுகிறது மெட்டா. பேஸ்புக், இன்ஸ்டாவை வீடியோதளங்களாக மெல்ல மாற்றும் மெட்டா, அதில் விளம்பரங்களை ஒளிபரப்பி லாபம் பார்க்கிறது.


ஆனால் வாட்ஸ் அப்பில் இருந்து  இன்னும் வருமானத்தை நேரடியாக ஈட்டவில்லை. மக்கள் எந்த விஷயத்தை பற்றி பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஒரு பிளாட்பார்மாக மட்டுமே வாட்ஸ் அப் தற்போது உதவி வருகிறது. உங்கள் நண்பருடன் வாட்ஸ் அப்பில் ஷூ பற்றி பேசினால், அடுத்த விநாடியே உங்கள் பேஸ்புக், இன்ஸ்டாவில் ஷூ விளம்பரம் வர இதுதான் காரணம். 




அப்டேட் சிறப்பம்சங்கள்:


இந்த புதிய அப்டேட்டில் பயனர்கள், வாட்சப் கணக்கை 10 சாதனங்கள் வரை கூடுதலாக இணைக்கும் திறன் போன்ற கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.


இதன் மூலம் வாட்சப் கணக்கை மொபைல் லேப்டாப் உள்ளிட்ட 10 சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடிய வசதி கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சில சேட்களை சில சாதனங்களுக்கு என ஒதுக்கி கொள்ளலாம். இதன் மூலம், குறிப்பிட்ட சாதனங்களை வணிகத்திற்கு என ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது வணிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வசதியானது கூடிய விரைவில் வரும் என்றும், ப்ரீமியம் சப்கிரிப்சனுக்கு கூடுதலாக தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் உள்ளிட்ட பிற தகவல்கள் பின்னர் தெரிய வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.